1987 – 1990 களிலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர் –  ITJP  தரவுத்தளம் அதிர்ச்சி தகவல்!

Saturday, May 16th, 2026


……
80களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் என ITJP புதிய தரவுத்தளம் தகவல்  வெளியிட்டுள்ளது.

குறிப்பாக இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (IPKF) நிலைகொண்டிருந்த 1980களின் இறுதிப்பகுதியில், கொல்லப்பட்ட அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய புதிய டிஜிட்டல் தரவுத்தளமொன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

‘சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ (International Truth and Justice Project – ITJP) அமைப்பு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணக்காப்பகத்தை (https://lkdd.itjpsl.com) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளது.

குறிப்பாக 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 1990 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில், இந்திய அமைதிகாக்கும் படையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களே இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ஆலோசனையின் கீழ், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், சத்தியப்பிரமாணங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் சர்வதேச தரத்திற்கு அமைய இந்தத் தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான விபரங்களை பிரதேசம், பாலினம், காலகட்டம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மிக இலகுவாகத் தேடிப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106