அடுத்துவரும் 3 நாள்களுக்கு வடக்கில் கனமழை தொடரும் – பேராசிரியர் பிரதீபராஜா எதிர்வுகூறல்!
Friday, May 15th, 2026
……..
தற்போது நிலவும் மழையுடனான காலனிலை எதிர்வரும் 18 ஆம் திகதிவரை தொடரும் என யாழ் பல்கலக்கழக பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது –
மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் பருத்தித்துறைக்கு வடக்கு, வடகிழக்கு திசையில் 309 கி.மீ. தூரத்திலும் இந்தியாவின் கடலூருக்கு கிழக்காக 219 கி.மீ. தூரத்திலும் மையம் கொண்டிருக்கும் நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுநிலையின் அமுக்க சாய்வு விசையின் பற்றாக்குறையின் காரணமாக பல மணித்தியாலங்களாக ஒரே இடத்தில் நிலைகொண்டு தற்போது மிக மிகக் குறைவான வேகத்தில் நகருகின்றது.
ஆனாலும் அதன் சுழற்சி வேகமாக இயங்குகின்றது. இதனால் அதன் மையம் அதிக ஈரப்பதனை உள்நோக்கி ஈர்க்கின்றது.
இந்த தாழ்வு நிலையின் மையம் ஈர்க்கின்ற அதிகளவிலான ஈரப்பதன் அரபிக் கடலிலிருந்து இலங்கையூடாக வங்காள விரிகுடாவை நோக்கி நகர்கின்றது.
இதனால் இலங்கையின் பல பகுதிகளும் பரவலாக கனமழையைப் பெறுகின்றன.
குறிப்பாக அரபிக்கடலிலிருந்து ஈரப்பதன் உள்நுழைகின்ற இலங்கையின் நிலப்பகுதிகளும் குறிப்பாக மேல் மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம், சப்ரகமுவ மாகாணம்) இலங்கையிலிருந்து ஈரப்பதன் வங்காள விரிகுடாவுக்கு வெளியேறுகின்ற இலங்கையின் நிலப்பகுதிகளும், கிழக்கு, வடக்கு, ஊவா பகுதிகளும் கனமழையைப் பெறுகின்றன.
இந்த நன்கமைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிர்வரும் 17.05.2026 வரை வங்காள விரிகுடாவில் நிலவும் என்பதனால் நாளை( 16.05.2026) வடக்கு, கிழக்கு, மேற்கு, வட மேற்கு, மத்திய, சப்ரகமுவா, ஊவா, தெற்கு மாகாணஙகள் கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
நாளை மறுதினம்
(17.05) மேற்கு, சபரகமுவா, தெற்கு, வடமேற்கு மாகாணங்கள் கனமழையையும் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்கள் மிதமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தொடர்ச்சியாக மழை கிடைக்கும் பகுதிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும் மழை கிடைக்கும் என்பதனால் இப்பிரதேசங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
அதேவேளை மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் நாளையும் நாளை மறுதினமும் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் இம்மாகாணங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அனர்த்தங்கள் இடம்பெறக்கூடும் என்பதனால் மக்கள் மிக அவதானமாக இருப்பது மிகவும் அவசியம்.
எதிர்வரும் 18.05.2026 காலை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் அதுவரை கடலுக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106