நீதிமன்ற அவமதிப்பு –  தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறை!

Thursday, May 14th, 2026


2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் தேசிய கல்வி நிறுவகத்தின்  முன்னாள் பணிப்பாளர் ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு உயர் நீதிமன்றம் கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.

குற்றவாளியாகக் காணப்பட்ட ஐ.ஜி.எஸ். பிரேமதிலக்கவுக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவருக்கு 3 மில்லியன் ரூபா (30 இலட்சம்) அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், மேலதிகமாக ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக உயர் நீதிமன்றம் வழங்கிய கட்டளையைச் செயற்படுத்தத் தவறியதன் மூலம், அவர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் கூறி அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தலைமை நீதியரசர் பிரிதி பத்மன் சூரசேன உள்ளிட்ட மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106