காலத்தின் நிறத்தை  விஜய்க்கு பரிசளித்த உதயநிதி ஸ்டாலின்!

Monday, May 11th, 2026




தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மரியாதை நிமித்தமாக மூத்த அரசியல் கட்சிகளை தலைவர்களை சந்திக்கின்றனர்.


ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


அதன்போது, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் வந்து விஜய்யை வரவேற்று அழைத்து சென்றார்.


வீட்டிற்குள் சென்ற விஜய்யை கையை பிடித்து அழைத்து மு.க.ஸ்டாலின் உபசரித்தார். இரு தலைவர்களும் சுமார் 10 நிமிடங்கள் பேசினார்.


தொடர்ந்து, முதலமைச்சர் விஜய்க்கு ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசாக அளித்தார்.


திராவிட இயக்கம் குறித்தும் அது குறித்த தலைவர்களின் கருத்துகளும் இப்புத்தகத்தில் விரிவாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106