மின்சார சபை மறுசீரமைப்பு – 1896 பேர் ஓய்வு – 8.5 பில்லியன் ரூபா இழப்பீடு!
Monday, May 11th, 2026இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது, 1,896 ஊழியர்கள் தாமாக முன்வந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனூரு கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக சுமார் 8.5 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில்:
“இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் அது நான்கு பிரதான நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது.
அந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பாத ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு (VRS) பெற வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்கீழ் 1,896 ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8.5 பில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையை மகா திறைசேரியின் மூலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய மின் விநியோக வலையமைப்பு (National Transmission Network) மற்றும் NSO நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையில் 50 சதவீதத்தையும், ஏனைய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை முழுமையாகவும் (100%) மகா திறைசேரி பொறுப்பேற்கும். இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் இன்று கிடைக்கப்பெறவுள்ளதுடன்,
இந்த வாரத்திற்குள்ளேயே இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,” என அவர் தெரிவித்தார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106