வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு – வடக்கில் மழைக்கு வாய்ப்பு – பிரதீபராஜா!
Tuesday, May 5th, 2026
….
அடுத்த 48 மணித்தியாலத்தில்
இலங்கைக்கு அண்மித்து
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலை புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எதிர்வு கூறியுள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் 08.05.2026 வெள்ளிக்கிழமை முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
2025/2026 வடகீழ்ப் பருவக்காற்றுக் காலத்தின் பின் வட இந்து சமுத்திரப்பகுதியில் தோற்றம் பெறுகின்ற முதலாவது தாழமுக்கம் என்ற வகையில் வானிலை அடிப்படையில் இது மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது.
ஏற்கனவே வெப்பச் சலனம் காரணமாக கணிசமான அளவு மழைவீழ்ச்சி கிடைத்த பிரதேசங்களில் இந்த தாழமுக்கம் காரணமாகவும் மழை கனமழை கிடைத்தால் சில அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்பதால் மக்கள் இது தொடர்பாக கரிசனை கொள்வது சிறந்தது.
இதனால் எதிர்வரும் 09.05.2026 முதல் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்றவர்கள் அவதானமாக இருப்பதோடு, கரையோர மீன்பிடியில் ஈடுபடுபவர்களும் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம். என்றும் தெரிவித்துள்ளார்.
000
–
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106