தமிழக முதல்வராகும் விஜய்!
Monday, May 4th, 2026
வெளியாகி வரும் முடிவுகளின் அடிப்படையில்
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது.
வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில், தற்போதுவரை தவெகவின் விஜய் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, ஒரு கட்சி அல்லது கூட்டணிக்கு 118 தொகுதிகள் தேவைப்படுகின்றன.
இந்தச் சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 111 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் உள்ளது.
000
Related posts:
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் கைவிடப்பட்டது!
நாட்டின் சவாலான சந்தர்ப்பங்களில் தேசிய பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மகத்தான பங்களிப்பு செய்தது ம...
அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைக் கட்டணம் தவிர்ந்து, நிகழ்வுகளுக்காக மாணவர்களிடமிருந்து நிதி அறவிடுவதைத் த...
|
|
|


