தனது பால்ய நண்பன் ஸ்ரீ குருக்களின் மகள் திருமணத்தில் கலந்து சிறப்பித்த டக்ளஸ் தேவானந்தா!
Sunday, May 3rd, 2026
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, தனது நீண்டகால பால்ய நண்பரான மறைந்த ஸ்ரீஸ்கந்தராஜா (நல்லூர் ஸ்ரீ குருக்கள்) அவர்களின் புதல்வி ஸ்ரீசங்கமீராவின் திருமண நிகழ்வில் கலந்து புதுமணத் தம்பதியிரை வாழ்த்தினார்.
யாழ்ப்பாணம் நல்லூர் இராஜ பரமேஸ்வரி மண்டபத்தில் (02) நடைபெற்ற குறித்த திருமண நிகழ்வில், கலந்துகொண்ட அவர், புதுமணத் தம்பதியினருக்கு தனது ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.
மறைந்த ‘நல்லூர் ஸ்ரீ குருக்கள்’ என அழைக்கப்படும் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களுடன் தனக்கிருந்த நெருங்கிய நட்பின் அடையாளமாக அவரது குடும்ப நிகழ்வில் பங்கேற்ற
டக்ளஸ் தேவானந்தா
தம்பதியினருக்கு இருவருக்கிடையே மணமக்கள் இருவரிடையே விட்டுக்கொடுப்பு, கலந்துரையாடல் மற்றும் சகிப்புத்தன்மையுடன் எதிர்கால வாழ்வை சிறப்பாக வாழவேண்டும் என்றும் வாழ்த்தியிருந்தார்.
விசேடமாக ஸ்ரீ குருக்களின் குடும்பத்தினர் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமது குடும்பத்துக்கும் இடையே தொடர்ந்துவரும் நெடு நாள் நட்பை கௌரவிக்கும் வகையில் அவருக்கு பொன்னாடை போத்தி சிறப்பித்திருந்தனர்.
இதேவேளை குறித்த நிகழ்வில் கல்விமான்கள், புத்திஜீவிகள், இந்துமத குருக்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்ததுடன் செயலாளர் நாயகம் கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கும் சமயத்துக்கும் செய்த சேவைகளை நினைவூட்டி எதிர்காலத்திலும் அவ்வாறு சேவைகள் கிடைக்க தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டனர்.
இந்நிகழ்வின் போது,செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா மற்றும் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்து மணமக்களை யாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106