யாழ் மாநகரின் உறுப்பினர் வசீகரனின் தந்தையாரின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் அஞ்சலி மரியாதை!
Friday, May 1st, 2026
…..
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபையின் உறுப்பினர் வசீகரனின் தந்தையார் கனகரத்தினம் பஞ்சரத்தினத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தினார்.
வயது மூப்பின் காரணமாக நோய்வாய்ப்பட்டிருந்த அமரர் கனகரத்தினம் பஞ்சரத்தினம் நேற்றையதினம் தனது 80 ஆவது வயதில் நேற்றையதினம் (30) காலமானார்.
இன்நிலையில் மானிப்பாய் வீதி ஓட்டுமடத்தில் உள்ள அன்னாரின் இல்லத்தில் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற செயலாளர் நாயகம் தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் அமரரது குடும்ப உறவுகளுக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது கட்சியின் யாழ் பிரதேச நிர்வாக செயலாகர் றீகன் இளங்கோ, யாழ் மானகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் கட்சியின் தோழர்கள் என பலரும் கலந்து தமது அஞ்சலிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கட்சியுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள அமரர் கனகரத்தினம் பஞ்சரத்தினத்தின் மகன்களான வசீகரன், சுதாகரன் ஆகியோர் கட்சியின் அரசியல் நடவடிக்கையிலும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106