சபையில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்கள் கால இழுத்தடிப்பின்றி நிறைவேற்றபப்பட வேண்டும் – வலி வடக்கில் ஈ.பி.டி.பி. வலியுறுத்து!

Friday, May 1st, 2026


……

வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் செயற்பாடுகளின்றி காணப்படுகின்ற சனசமூக நிலையங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தி அவற்றினை வினைத்திறனாக செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர் பாலசுப்பிரமணியம் ஸ்ரீதரன் சனசமூக நிலையங்கள் போன்ற சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதன் மூலம் அவர்கள் வழிதவறிப் போவதனை தடுக்க முடியும் எனவும் வலியுறுத்தினார்.


மேலும் சபையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விடயங்கள் காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதுவே மக்களுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும் என்பதையும் கௌரவ உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.


வலிகாம் வடக்கு பிரதேச சபையில் நேற்று இடம்பெற்ற 11 ஆவது அமர்வின்போதுஇ ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் பா. ஸ்ரீதரனினால் குறித்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அங்கு அவர் தொடர்ந்து கருத்துக்களை முன்வைக்கையில்


‘வலி வடக்கு பிரதேசத்தில் நீண்டகாலமாக பல சனசமூக நிலையங்க இயங்காமல் கூட்டங்கள் நடதத்தப்படாமல் இருப்பதாக மக்களால் முறையிடப்படுகின்றது. அவ்வாறு இருக்கின்ற சனசமூக நிலையங்களை மீள கூட்டங்களை போட்டு இயங்க வைப்பதற்கு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சன சமூக நிலையங்கள் சிறப்பாக செயற்பட்டு அவற்றில் இளைஞர்கள் ஆர்வமுடன் செயற்படுகின்ற சூழலை உருவாக்குவதன் மூலம்இ வழிதவறாத – சமூக அக்கறை கொண்ட ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தினை உருவாக்க முடியும். அதுதொடர்பாக சபை விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன்.


அதேபோன்று எமது பிரதேசததின்; தூய்மையை பேணும் வகையில் அனைத்து பிரதேசங்களிலும் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி குப்பைத்தொட்டிகளை அமைக்க வேண்டும் என்றும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் இந்த சபையிலே பிரேரணை முன்வைத்திருந்தேன். இதுவரையில் அதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டதாக தெரியில்லை. சபையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற விடயங்கள் காலதாமதம் இன்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதுவே மக்களுக்கும் ஆரோக்கியமானதாக இருக்கும்.


அதைவிடஇ சேந்;தாங்குளம் பிரதேசத்தில் தனியார் காணிக்குள் செயற்பட்டு வருகின்ற கோழிக்கடை உரிய அனுமதிகள் இன்றி செயற்பட்டு வருதாகவும் பிரதேச மக்களினால் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவை தொடர்பிலும் ஆராயப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றேன்’ என்று தெரிவித்;தார்.


அதேவேளை வழுக்கையாறு தொடர்பான வரலாறுகளை காட்சிப்படுத்தல் மற்றும் காங்கேசன்துறை வரவேற்பு வளைவு அமைத்தல் தொடர்பாக கௌரவ உறுப்பினர்களினால் இரண்டு பிரேரணைகள் நேற்றை சபை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அவைதொடர்பாக கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் பிரேரணையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் விடயங்களை நல்லவிடயங்ளாக இருந்தாலும் இவற்றைவிட முன்னுரிமை அளிக்கப்பட்ட வேண்டிய – மக்களுக்கு அசௌகரியங்களான பல விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக எத்தனையோ வீதிகள் மழைகாலத்தில் செல்லமுடியாமல் மக்கள் பெரும் சிரமப்படுகின்றார்கள் அவற்றை முன்னுரிமைப்படுத்துவதே ஆரோக்கியமானதாக இருக்கும்.

வழுக்கையாறு தொடர்பான வரலாறுகளை காட்சிப்படுத்துவது நல்லவிடயமாக இருந்தாலும் அது நீர்பாசணத் திணைக்களத்திற்கு உரியது என்ற வகையில் அவர்களின் கவனத்திற்கு குறித்த விடயத்தினை எடுத்துச் சென்று நடைமுறைபடுத்துவதே நல்லது என்ற கருத்தினையும் முன்வைத்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106