மாநகரின் சமகால செயற்பாடுகள் குறித்து கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல்!

Monday, April 27th, 2026

மாநகர சபையினால் யாழ்ப்பாணம் பிரதேசம் குறிப்பாக யாழ் மாநகரின் சமகால நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

கட்சியின் யாழ் தலைமை அலுவலகத்தில் (26) இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது கட்சியின் மாநகர சபையின் உறுப்பினர்களது மக்களுக்கான செயற்பாடுகள் குறித்தும் கட்சி – மக்களிடையே இருக்கின்ற நெருக்கமான உறவுகள்; ஊடாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்  தேவைப்பாடுகள் அறியப்பட்       டு அவற்றுக்கான திருர்வுகளை  கண்டறிவதும்   அதனூடாக. முன்னெடுக்கபப்படும் சேவைகளின் கட்சிசார் மக்கள் மயமாக்கல் குறித்து விசேடமாக ஆராயப்பட்டது.

குறிப்பாக மாநகரின் அநேக பகுதிகளில் இருக்கும் உடன் தீர்வுகாணப்பட வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டு. குறிப்பாக திண்மக்கழிவகற்றல், கழிவு எரியூட்டியின் அவசியம் குறித்தும்  அவற்றுககான தீர்வுகளை காண்பதற்கான பொறிமுறைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.  

இந்த சந்திப்பின்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம். யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன். கட்சியின் யாழ் பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் இளங்கோ முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கட்சியின் யாழ் மாநகர சபையின் உள்ளு+ராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் குறித்த பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்துகொண்டு ஆரோக்கியமான விடங்கள் குறித்து கருத்துக்களை முன்வைத்து தீர்வுகளை பெறும் முறைமை குறித்து விரிவாக விவாதித்pது கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106