பேராசிரியர் நவரட்ணராஜாவின் மகள் திருமண நிகழ்வில் கலந்து சிறப்பித்த டக்ளஸ் தேவானந்தா!
Thursday, April 23rd, 2026
………………..
பேராசிரியர் நவரட்ணராஜா அவர்களின் புதல்வியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்துள்ளார் .
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராக இருந்த காலப் பகுதியில் அமைச்சு சார் துறையின் ஆலோசகராகவும், நாரா நிறுவனத்தின் முன்னாள் தலைவருமாக பணியாற்றியிருந்த பேராசிரியர் நவரட்ணராஜாவின் மகளது திருமண நிகழ்வுகள் இன்று (23) வவுனியாவிலுள்ள “ஹொட்டேல் நோர்த்வேயில்”
நடைபெற்றது.
இந்நிலையில் புதிய குடும்ப வாழ்வில் இணைந்த தம்பதியினரை நேரில் சென்று வாழ்த்திய டக்ளஸ் தேவானந்தா,
“பரஸ்பர புரிந்துணர்வுடன் குடும்ப வாழ்வை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே, வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை வெற்றிகொண்டு சிறப்பான வாழ்வை வாழ முடியும்.” என்றும் அறிவுரை கூறியிருந்தார்.
இதேநேரம் இந்த சுப நிகழ்வில் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதன், செயலாளர் நாயகத்தின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106