தாளையடி குடிநீர் தீவகம் வருகை – இணைப்புகளை பெற்றுக்கொள்வதில் வேலணை மக்கள் மும்முரம்!
Thursday, April 23rd, 2026
மருதங்கேணி தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தற்போது தீவகப் பிரதேசத்தின் அநேக பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வேலணை பிரதேசத்தின் பல வட்டாரங்களில் மக்கள் தமக்கான குடிநீரை பெற்றுக்கொள்வதற்கான இணைப்புக்களை மேற்கொள்வதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இலவச குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ள ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டிருந்த பயனாளிகள், தமக்கான இணைப்புகளை மேற்கொள்;வதில் ஏற்பட்டிருந்த காலதாமதங்கள் மற்றும் அவசிய தேவைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்திடம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் அது தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனையின் பெயரில் துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி இணைப்புகள் துரிதமாக வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறிப்பாக வறிய மக்களுக்கும் அனைத்துத் Nவைகளுக்குமான சேவைகள் கிடைக்கபn;பற வேண்டும் என்ற டக்ளஸ் தேவானந்தாவின் தூரநோக்கு எண்ணக்கருவுக்கேற்ப கடந்த காலங்களில் மின்சாரம், குடிநீர், வாழ்வாதார உதவித்திட்டங்கள்;, போக்குவரத்து சேவைக்கான ஏற்பாடுகள், விவசாய மற்றும் கடற்றொழில் சார் உதவித்திட்டங்கள், வீட்டுத்திட்டங்கள் தொழில் வாய்ப்புகள் என இன்னும் ஏராளமான சேவைகளும் திட்டங்களும்; தீவக மக்;கள் உள்ளிட்ட யாழ் மாவட்ட மக்களுக்காக மத்திய அரசிடமிருந்தும் கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தியும் பெற்றுக்கொடுத்திருந்ததாகவும் அனுசியா ஜெயகாந்த் நினைவு கூரியிருந்தார்.
இந்நிலையில் எமது தீவக மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையான குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கொடுக்கப்பட வேண்டும் என்ற அவரது நிலைப்பாட்டுக்கமைய தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு திட்டம் பல்வேறு தரப்பினரது அரசியல் அழுத்தங்கள் தடைகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டு இன்று பயன்பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பபை தாமும் அனுபவித்துக்கொள்ளும் வகையில் தற்போது வேலணை பிரதேச மக்கள் தமக்கான குடிநீர் இணைப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அதற்குரிய குழாய் பொருத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த சில நாள்களாக ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டிருந்த பயனாளிகளுக்கான இலவச குடிநீர் இணைப்பபை பெற்றுள்ள மக்கள் தமது இணைப்புக்களை மேற்கொண்டுள்ள நிலையில் அந்த இணைப்புகளை பெறும்போது பயனளர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளுக்கும் துறைசார் அதிகாரிகளு+டாக எம்மால் முடியுமான தீர்வுகளை பெற்றுக் கொடுத்து குடிநீரை பெறுவதற்கான ஏதுநிலைகள் உருவாக்கி கொடுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106