தென்மராட்சி கல்வி வலய ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி தொடர்பான அறிவிப்பு!

Sunday, April 19th, 2026


……..
ஆரம்ப பிரிவு மாணவர்களுக்குரிய தென்மராட்சி கல்வி வலய ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி
தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில்  எதிர்வரும் ஏப்ரல் 22ஆம் திகதி காலை 8.00 மணிக்கு சாவகச்சேரி இந்து ஆரம்பப் பாடசாலையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வின் போட்டி பணிப்பாளராக பிரதிக் கல்விப் பணிப்பாளர் (ஆங்கிலம், வெளிநாட்டு மொழிகள் மற்றும் இருமொழிக் கல்வி)  பி.என். சுதர்சன் செயல்படும் நிலையில்,

முதல் குழுவிற்கான கௌரவ விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஆங்கில மொழிக் கற்பித்தல் துறைத் தலைவர் மற்றும் மூத்த விரிவுரையாளர் கலாநிதி கே. சண்முகநாதன் கலந்துகொள்ளவுள்ளார்.

இரண்டாம் குழுவிற்கான கௌரவ விருந்தினராக யாழ் பல்கலைக்கழகத்தின் கல்வித் துறையைச் சேர்ந்த மூத்த விரிவுரையாளர் கலாநிதி வி. விஜயபாஸ்கர் பங்கேற்கிறார்.

மாணவர்களின் ஆங்கிலத் திறனையும் மேடைப் பயிற்சியையும் மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்க அழைக்கப்பட்டுள்ளனர்.

0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106