இல்லற வாழ்வு சிறக்க தம்பதியிடையே ஆழமான புரிதல் அவசியம் – வாழ்த்துரையில் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, April 16th, 2026
………
மணபந்தத்தில் புதிதாக இணையும் தம்பதியினருக்கு மத போதனையும் சட்ட வழிகாட்டுதலும் கூறப்படுவது வழமையான ஒன்று.
ஆனால் இவற்றுக்கும் அப்பால், நான் போதனையாகக் கூறும்,
“மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுப்புடனும் சகிப்புத் தன்மையுடன் பரஸ்பரம் குடும்ப வாழ்வை முன்னெடுத்துச் சென்றால்
வாழ்வை மிகச் சிறப்பாக வெற்றிகொள்ள முடியும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் அவர்களின் புதல்வியின் திருமண நிகழ்வு இன்றையதினம் (16) நடைபெற்றது.
யாழ் திவ்ஜமஹால் மண்டபத்தில் நடைபெற்ற குறித்த திருமண நிகழ்வில் கலந்து சிறப்பித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, மணமக்களுக்கு தனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் தெரிவித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
குறிப்பாக ஒரு தம்பதியின் இல்லற வாழ்வு சிறக்க வேண்டுமானால் தம்பதியிடையே ஆழமான புரிதல் அவசியம்.
கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துகொண்டு, விட்டுக்கொடுப்புடனும் சகிப்புத்தன்மையுடனும் செயற்பட வேண்டும்.
இந்த பரஸ்பர புரிந்துணர்வுடன் குடும்ப வாழ்வை முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே, வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை வெற்றிகொண்டு ஒரு சிறப்பான வாழ்வை வாழ முடியும்.”
இது நான் உங்களுக்கு கூறும் போதனையாகும். எனது இந்த போதனையை ஏற்று உங்கள் மண வாழ்வை சிறப்புற வெற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்
இதேநேரம் இந்த சுப நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106