50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை -மாவிலி துறைமுகத்தில் குழப்பம்!
Wednesday, April 15th, 2026
……..
நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகுச் சேவைவையை முன்னெடுத்த
நெடுந்தாரகை படகு 50 க்கு மேற்பட்ட பயணிகளை மாவிலி துறைமுகத்தில் ஏற்றாது விட்டு சென்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தெரியவருகையில் +
இன்று (15) 3.00 மணிக்கு நெடுந்தாரகை படகு நெடுந்தீவின் மாவிலித் துறைமுகத்தில் இருந்து சேவையை முன்னெடுத்திருந்தது.
இன்றைய நாளின் இறுதிச் சேவையாக இச்சேவை இருந்ததால் மக்கள் யாழ் நோக்கிச் செல்ல அதிகளவில் கூடி நின்றனர்.
குறிப்பாக புதுவருட தினத்தை முன்னெட்டு நெடுந்தீவு சென்றிருந்த மக்கள் மற்றும் தொழில் சாத் பலர் என 150 இற்கும் அதிகமானோர் சேவையை பெற காத்திருந்தனர்.
ஆனால் குறித்த நெடுந்தாரகை படகின் சேவையை முன்னெடுப்போர் சட்டத்தின் பிரகாரம் என கூறி 100 பயணிகளை ஏற்றிய நிலையில் மிகுதி 50 க்கு மேற்பட்ட பயணிகளை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் விட்டு சென்றுள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகள் தமது பயணத்தை தனியார் படகொன்றை 35000 ரூபாவுகு வாடகைக்கு அமத்தி தமது பயணத்தை மேற்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குறித்த படகு சேவையில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகையில் – நெடுந்தீவின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நெடுந்தீவில் தங்கி இருக்கும் நிலையில் இவ்வாறான சம்பவம் நடைபெற்றும் கூட அவர் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காதிருந்தது தமக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் மன வேதனையையும் கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106