உரிமைகோரப்படாத ஏனைய காணிகளை அந்த பிரதேச மக்களின் நலன்களன்றி எந்தவொரு வெளித் தேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடாது–தையிட்டி விவகாரம் குறித்து டக்ளஸ் வலியுறுத்து!

Sunday, April 12th, 2026

மக்களின் நிலங்களில் அத்துமீறி கட்டப்பட்ட தையிட்டி விகாரையின்; காணி நிலங்களை, தமது உரித்து என உரிமங்களுடன் அடையாளப்படுத்திய ஒரு தொகுதி மக்களிடம் மீள ஒப்படைப்பதற்கு நில அளவீடு செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள சூழ்நிலையில்;, அப்பகுதியில் மேலும் பல காணிகள்;    இன்னமும் அதன் உரிமையாளர்களுக்கு அடையாளப்படுத்தும் சூழ்நிலையில் இல்லாதிருக்கும் நிலையில், அவற்றை வேறு நோக்கங்களுக்கு பயன்னடுத்த முயற்சிக்காது அந்த காணிகளின் பூர்வீக உரித்தாளர்களுக்கே அவற்றை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவ்வாறு உரிமை கோரப்படாத நிலை உருவாகுமானால் அக்காகாணிகள் எவற்றையும் வெளித் தேவைகளுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஏதிர்வரும் 17 ஆம் திகதி தையிட்டியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட திஸ்ஸ விகாரை காணிகளை நில அளவீடு செய்து தொடர்பில் கருத்துக் கூறும்போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –

தையிட்டியில் மக்களின் பூர்வீக காணி நிலங்களில் அத்துமீறி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள விகாரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படாது நீண்டகாலமாக அது இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது.

ஆனாலும் அதற்கு விரைவாக தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. கடந்த எமது ஆட்சிக் காலத்தில் குறித்த பிரச்சினைக்கு குறிப்பாக அந்த மக்களுக்கு விரைவான ஒரு நியாபயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்குடன் பல முயற்சிகளில் முன்னெடுத்திருந்;தோம்.

குறிப்பாக குறித்த காணிகள் அளக்கப்பட வேண்டும் என்ற அவசிய தேவை ஒன்று அன்று ஏற்பட்டதனால்   அவற்றை அளவீடு செய்வதற்கும் நாம் முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் அன்று சிலர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி அதை பின்தள்ளிவிட்டார்கள்.  இதனால் அது இன்றும் தீராப் பிரச்சினையாக இழுபட்டுக் கொண்டிருக்கின்றது.

இன்நிலையில் தற்போது சிலர் தமது காணிகளை அடையாளப்படுத்தியுள்ளனர். குறித்த மக்களின் உரித்து அடையாளங்களை சான்றாக கொண்டு அந்தக் காணிகளை அளவீடு செய்து அந்தந்த மக்களுக்கே காணி நிலங்களை கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகின்றது.

ஆனால் பலர் இன்னமும் தமது காணிகளை அடையாளப்படுத்தும் சூழ்நிலையில் இல்லாதிருப்பதனால் அந்த மக்களுடைய மிகுதிக் காணிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டு அந்த காணிகளின் பூர்வீக உரித்தாளர்களுக்கே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே என்பது எமது நிலைப்பாடு.    

இதேநேரம் உரிமங்களை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சொன்னால் அந்தக் காணிகளை வேறு எந்த நடவடிக்கைகளுக்கும் பாவிகக முயற்சிக்க கூடாது. ஆவற்றை அந்தப் பிரதேசத்தினுடைய  அந்த மக்களினுடய பொதுவான தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அது அப்பகுதி மக்களுக்களது விவசாயமாக இருக்கலாம் அல்லது கால்நடை வளர்ப்பாக இரக்கலாம்; அல்லது அப்பகுதி மக்களது  சுய பொருளாதாரத்துக்கான வாழ்வாதாரத்துக்கானதாகவோ அன்றி   அந்த மக்களது பொதுத் தேவையாகவும் இருக்கலாமே அன்றி அவற்றை தவிர அதற்கு புறம்பாக வெளித் தேவைகளுக்காக குறித்த காணிகளை பயன்படுத்தக் கூடாது என்பதுதான் எமது நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106