நாவாந்துறை சென்மேரீஸ் சாதனை – யாழ் மாநகர சபை அமர்வில் வாழ்த்திய ஈ.பி,டி.பி!

Friday, April 10th, 2026

இலங்கை உதைப்பந்தாட்ட வரலாற்றில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாவாந்துறை சென்மேரீஸ் விளையாட்டு கழகம் தேசிய ரீதியான பிரதான  சுற்றுத் தொடர் ஒன்றில் சம்பியன் பட்டம் வென்று புதிய அத்தியாயத்தைப் படைத்துள்ளதாக யாழ் மாநகர அமர்வில் சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அவ் அணியை பாராட்டியதுடன் வீரர்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்ற முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய கட்சியின் மாநகர உறப்பினரம் முன்னாள் முதல்வருமான திருமதி பற்குணராயா விரர்களுக்கு பாராட்டை தெரிவித்து மேலும் கூறுகையில் –

இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடத்திய ‘சம்பியன்ஸ் கிண்ண’ நொக்-அவுட் உதைப்பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில், யாழ். நாவாந்துறை சென். மேரிஸ் கழகம், பலம் வாய்ந்த சோண்டர்ஸ் கழகத்தை வீழ்த்தி மகுடம் சூடி எமது மாநகருக்கு பெருமை சேர்த்துள்ளது,

இது எமது சபையின் விளையாட்டு மற்றம் கல்வி குழுவின் செயற்பாடுகளின் மெச்சத்தக்க செயற்பாடுகளக்கான சான்றாகும்.

அத்துடன் கடந்த காலங்களில் எமது கட்சியும் இப்பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு பல்வேறு தேவைகளை பெற்றுக்கொடுத்து ஊக்கமளித்திருந்தது.

இவ்வாறு எமது மாநகருள் இன்னம் பல சிறந்த அணிகள் இருக்கின்றன. அவர்களும் எமது விளையாட்டுத் துறையின் பலம் மிக்க சக்திகளாக இருக்கின்றனர். அவர்களும் சாதிக்க எமது சபையும் நாமும் பல வழிகளிலும் ஒத்தாசைகளை வழங்க தாயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106