மீண்டும் யாழ் வந்த புகையிரதம்!

Thursday, April 9th, 2026


……..
டித்வா சூறாவளியினால் சேதமடைந்திருந்த வடக்கு ரயில் மார்க்கம் புனரமைக்கப்பட்டு கொழும்பு கல்கிசை  காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் இன்று(09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்பதாக புனரமைப்பு பணிகளுக்காக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்காலிகமாக புனரமைக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கிடையிலான ரயில்கள் குறைந்த வேகத்துடனேயே பயணித்தன.

சேதமடைந்த பகுதிகளை முழுமையாக புனரமைப்பதற்காக வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்திய அரசின் 05 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பங்களிப்பில் இந்த மார்க்கத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து கொழும்பு கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 5.15-க்கு கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை நோக்கியும் பிற்பகல் 1.05-க்கு காங்கேசன்துறையில் இருந்து கல்கிசை நோக்கியும் பயணிக்கும் ரயில்களில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கும் தற்போது சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106