ஜே.ஆரின் மருமகன் யார் ? – ரணிலா? அனுரவா? – விமல் வீரவங்சவுக்கு ஏற்பட்ட சந்தேகம்!
Monday, April 6th, 2026முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசியல் வாரிசு அல்லது அவரது மருமகன் ரணில் விக்கிரமசிங்ஹ என்றே நினைத்துக் கொண்டிருந்தாலும், அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமானவர் அனுர குமார திசாநாயக்க என்றே தனக்கு இப்போது நினைக்கத் தோன்றுவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியிலுள்ள அவர், நாட்டில் எதிர்வரும் காலங்களில் ஏற்படவுள்ள பாரதூரமான நிலைமைகள் பற்றி அரசாங்கத்திற்கோ அல்லது சம்பிரதாய எதிர்க்கட்சிக்கோ உரிய புரிந்துணர்வு இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
விமல் வீரவங்ச மேலும் தெரிவிக்கையில், நிலக்கரி பற்றாக்குறை மற்றும் மின்னுற்பத்திக்கென எதிர்வரும் நாட்களில் தேவையான நீர் இன்மை காரணமாக பெரும் எரிசக்தி நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும்.
இதற்கும் மேலதிகமாக நாட்டில் உணவு உற்பத்தி வீழ்ச்சி கண்டுள்ளமை மற்றும் அந்நிய செலவாணிப் பற்றாக்குறை காரணமாக விடுக்கப்படுகின்ற அழுத்தத்தின் முன்பாக மக்களது வாழ்க்கை மேலும் கடினமாகக் கூடும்.
நாடு இத்தகையதொரு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும்போது வெளிச் சக்திகள் தலையிட்டு தங்களுக்குத் தேவையான அரசியல் மாற்றங்களை செய்வதற்கு முயற்சிக்கலாம்.
தற்போதைய ஆட்சியாளர்களை மேலும் பாதுகாக்க முடியாதென உணர்ந்தால் அந்தச் சக்திகள் வேறு மாற்று ஏற்பாடுகள் நோக்கிச் செல்லும்.
நேபாளத்தில் இருந்துவந்துள்ள சம்பிரதாய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ரெப் பாடகரொருவர் ஆட்சியதிகாரத்திற்கு வந்துள்ள சம்பவத்தை உதாரணத்திற்கு எடுத்துக் காட்டுகின்ற விமல் வீரவங்ச, உலகில் ஏற்படுகின்ற இத்தகைய அரசியல் பிறழ்வுகள் தொடர்பில் இலங்கையின் சம்பிரதாய அரசியல் கலந்துரையாடல்களில் எவ்விதமான கலந்துரையாடல்களும் இடம்பெறுவதில்லை எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106