அமைச்சர் லால்காந்த தனது வீடு பற்றி உண்மையைக் கூற வேண்டும் -மக்களை முட்டால்களாக்கக்கூடாது என பௌத்த தேரர் கடும் எச்சரிக்கை!
Monday, April 6th, 2026தற்போதைய அரசாங்கத்தின் விவசாய அமைச்சர் லால்காந்தவின் வீடு மற்றும் அது தொடர்பில் சமூகத்தினுள் நிலவுகின்ற கதைகள் தொடர்பில் ராஜாங்கனயே சத்தார்த தேரர் தனது கருத்துக்களைக் கூறி, அரசாங்தையும் அமைச்சரையும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்த வீடு தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை எழுப்புவதாகத் தெரிவித்துள்ள சத்தார்த தேரர், குறிப்பாக, இந்த வீடானது பிரபல வர்த்தகர், எவன்காட் அதிபர் நிஸ்ஸங்க சேனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளதாக ஒரு சிலர் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் தொலைபேசி அழைப்பு எடுத்ததும் நூறு நண்பர்களிடமிருந்து ஐந்து இலட்சம் ரூபா வீதம் ஐந்து கோடி ரூபாவினத் திரட்டிக்கொள்ள முடியும் என லால்காந்த கூறியிருந்த கூற்று தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேரர், அந்த நண்பர்கள் யார்? என்பது பற்றியும், இந்த வீடு எவ்வாறு கட்டியெழுப்பப்பட்டது என்பது பற்றியும் தெளிவான பதிலை அமைச்சர் தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களது நம்பிக்கை சிதைந்து போகுமெனில் தற்போதைய ஜனாதிபதிக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ பாதையில் இறங்கிச் செல்வதற்கு முடியாததொரு நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106