தனியார் மயமாகும் அரச மருத்துவத்துறை – IMF இன் நிபந்தனையை நடைமுறைப்படுத்த அரசு முயற்சி – நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ அதிர்ச்சித் தகவல்!
Sunday, April 5th, 2026
…….
நாட்டில் செயற்பட்டு வருகின்ற சுதந்திர சுகாதராச் சேவையை தனியார் மயப்படுத்தி, அனைத்து மருத்துவமனைகளையும் தனியார் நிறுவனங்களிடம் குத்தகைக்கு வழங்க, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையின்பேரில் அரசாங்கம் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக மருத்துவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான மருத்துவர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கழிந்துள்ளபோதும் தேசிய சுகாதார கொள்கையினையோ, மனித வள முகாமைத்துவத்தையோ, ஒளடதங்கள் கொள்கையினையோ வகுப்பதற்கு சுகாதரா அமைச்சருக்கு இயலாமல் போயுள்ளது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
மருத்துவமனைகள் கட்டமைப்பிற்குத் தேவையான வசதிகளை வழங்காமை மற்றும் மருந்து வகைகளுக்காக தட்டுப்பாட்டினை உருவாக்குதல் என்பவை ஊடாக சுதந்திர சுகாதாரத்துறையை படிப்படியாக அழித்துவிட்டு, பணம் செலுத்துகைளின்மீதான அடிப்படையில் சுகாதாரச் சேவையின்பால் மக்களைத் தள்ளிவிடும் சதித்திட்டமொன்றின் ஆரம்பகட்ட நடவடிக்கை தற்போது செயற்படுத்தப்பட்டு வருவதாக நிபுணத்துவ மருத்துவர் சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது 2000க்கும் 2500க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் வைத்தியர்களுக்கான தட்டுப்பாடும், சுமார் 1000 நிபுணத்துவ வைத்தியர்களுக்கான தட்டுப்பாடும் நிலவுகின்றது.
இந்த நிலையில், பயிற்சியினை நிறைவுசெய்துள்ள புதிய மருத்துவர்களை அரச சேவையில் இணைத்தக் கொள்வதில்லை என சுகாதார அமைச்சர் அச்சுறுத்தி வருகின்றார்.
இது தொழில் சாரந்தோரை அடக்கும் நடவடிக்கையாகும்.
குறிப்பாக, கிராமிய மருத்துவமனைக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளமை காரணமாக, சாதாரண மக்கள் பெரும் பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றனர்.
சுகாதார அமைச்சரின் தேர்தல் மாவட்டமான களுத்தறை மாவட்டத்தில்கூட ஆரம்ப மருத்துவமனைகளின் நிலைமைகள் மிகவும் கவலைக்கிடமாகவே உள்ளன. ஒரு சில பிரதேச மருத்துவமனைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.
மருந்து வகைளை வாங்குவதற்கும், பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் இயலாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பலிகொடுத்துக் கொண்டு அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களை முன்னெடுத்து வருவதாகவும் மருத்துவர்களது சங்கம் தெரிவிக்கின்றது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106