நாட்டின் சனத்தொகையில் 33 வீதமானோர் போசாக்கான உணவுக்கு போராடுகின்றனர் – எச்சரிக்கும் உலக வங்கி!
Sunday, April 5th, 2026
…..
நாட்டின் சனத்தொகையில் 33 வீதத்தினருக்கு போதியளவு போசாக்கான உணவினைப் பெற்றுக்கொள்ள இயலாதுள்ளதாகவும், இலங்கையின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி வேகத்திற்கிணங்க எதிர்வரும் தசாப்தத்திற்குள் தொழில் சந்தைக்கு பிரவேசிக்கும் இளைஞர், யுவதிகளில் பெரும்பாலானவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் இல்லாது போகுமெனவும் உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் 10 வருடங்களில் சுமார் 10 இலட்சம் இளைஞர், யுவதிகள் தொழில் சந்தைக்கு வரவுள்ளதாகவும், உருவாகிக் கொண்டிருப்பது சுமார் 3 இலட்சம் புதிய தொழில்வாய்ப்புகள் மாத்திரமே என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.
பொருளதார பிரச்சினை காரணமாக தொழில்வாய்ப்புகளை இழந்துள்ள பெருந்தொகையினருக்கு இதுவரையில் தொழில்வாய்ப்புகள் சிடைக்கவில்லை என்றும், நாட்டின் உழைப்புச் சந்தையானது இதுவரையில் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை எனவும் உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.
மேலும் அந்த அறிக்கையில்,
2019ஆம் ஆண்டில் 11.5 வீதமாக இருந்த நாட்டின் வறுமை நிலையானது, பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டில் 27.5 வீதம் வரையில் அதிகரித்திருந்தது. கடந்த வருட இறுதியின்போது அது 22.3 வீதம் வரையில் ஓரளவு குறைந்திருந்தது. எதிர்வரும் 2 – 5 வருடங்களில் அது 20 வீதம் வரையில் குறையலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் மின் கட்டணமானது ஆசியாவிலேயே அதிகரித்த மின்கட்டணமாக இருந்து வருகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலைப்படுத்திக் கொள்வதற்கென இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகளை உலக வங்கி வரவேற்கிறது. எனினும் அனைத்து பொருளதார நிலைத்தன்மை இன்னமும் முழுமையாக எட்டப்படவில்லை எனவும் உலக வங்கியின் புதிய அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106