தோழர் ரகீம் அவர்களின் சிறியதாயாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலிமரியாதை!

Sunday, April 5th, 2026


……..
தோழர் ரகீம் (நிக்சன் பபி)அவர்களின் சிறியதாயார் சகாஜராஜன் கேமலதா அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.

அமரர் சகாஜராஜன் கேமலதா வயது மூப்பின் காரணமாக நேற்று முந்தினம் காலமானார்.

அமரரது உடலம் கொழும்புத்துறை சென்மேரிஸ் வீதியிலுள்ள அன்னாரது இல்லத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இல்லத்திற்குச் சென்ற செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலித்தியதுடன் அமரரது உறவுகளுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இறுதி அஞ்சலியின் போது கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகான்,யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, கட்சியின் யாழ் பிரதேச நிர்வாக செயலர் றீகன் இளங்கோ உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106