ஈரான் கோராத் தாண்டவம் – இஸ்ரேலின் முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்!
Saturday, April 4th, 2026ஈரான் இன்று (04) காலை இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளைக் குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் காரணமாக இஸ்ரேலின் நெகேவ் (நேபநஎ) பகுதியில் அமைந்துள்ள தொழிற்துறை வலயம் ஒன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன் இஸ்ரேலிய தீயணைப்பு படையினர் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஈரானிலிருந்து ஏவப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட ஏவுகணைகளை இடைமறிப்பதற்காக வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதல்களின் போது ஏவுகணையின் சிதறல்கள் நெகேவ் பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் வீழ்ந்ததில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தெற்கு இஸ்ரேலை குறிவைத்து ஈரான் நடத்திய முதல் ஏவுகணைத் தாக்குதலின் காரணமாக பீர்ஷேபா மற்றும் அராத் நகரங்களிலும் நெகேவ் பகுதியிலும் அபாய ஒலி எழுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்துறை வலயத்தில் 40க்கும் மேற்பட்ட இரசாயன மற்றும் தொழில்நுட்பத் தொழிற்சாலைகள் இருப்பதால் நச்சு வாயுக்கள் வெளியேறக்கூடும் என்றும்இ எவ்வித அபாயகரமான கசிவுகளும் இதுவரை ஏற்படவில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் இரண்டாவது பதிலடித் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய இஸ்ரேலில் உள்ள ஏழு நகரங்களில் 17 வெவ்வேறு இடங்களில் ஏவுகணைச் சிதைவுகளும் சிதறல்களும் விழுந்ததாக இஸ்ரேலின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை ஈரான் ஏவுகணைத் தாக்குதலால் மத்திய இஸ்ரேலில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலுக்கு மேல் அடுத்தடுத்த தாக்குதல்கள் காணப்பட்டதாகவும் இதில் டெல் அவிவில் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106