இவ்வாண்டு நிர்ணயிக்கப்பட்ட திகதிகளிலேயே அனைத்து பரீட்சைகளும் நடெறும் – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!
Wednesday, April 1st, 2026
………
2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில், உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியீட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் –
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே 2026 பரீட்சை திகதிகள் அறிவிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் அதற்கேற்ப தயாராகுமாறும் கேட்டுக்கொண்டார்.
கடந்த காலங்களில் பரீட்சை திகதிகள் மாறியதால் மாணவர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டதால், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திகதிகளிலேயே பரீட்சைகள் நடத்தப்படும் என்று உறுதிபடுத்தினார்.
அதன்படி, 2026ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் மாதம் 09 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதியும் மற்றும் சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 08 ஆம் திகதியும் நடத்தப்படவுள்ளன.
இதேவேளை 2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஏப்ரல் 22 முதல் 30 வரை நடைபெறவுள்ளன.
இன்று ம்முதல் இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் தொடங்கப்படுவதாகவும், ஏப்ரல் 30 முதல் மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106