ரஷ்ய இராணுவ விமானம் விபத்து – 29  வீரர்கள் உயிரிழப்பு!

Wednesday, April 1st, 2026


…..
ரஷ்யாவின் ‘அன்டோனோவ்-26’ (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும்உயிரிழந்துள்ளதாகரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் (31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா தீபகற்பத்தின் மேல் திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த குறித்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 6 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் என மொத்தம் 29 பேர் பயணித்திருந்ததுடன், அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்ததில், வெளிப்புறத் தாக்குதல்கள் எதற்கும் இலக்கானதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
090



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106