அவசிய தேவைகளுக்கு தீர்வை காணும் நோக்கில் நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்!

Friday, March 27th, 2026


……..
பல்வேறு பிரச்சினைகளுக்கான தீர்வை காணும் நோக்குடன் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (27) அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்துரசேகரன் தலைமையில் நடைற்றது

யாழ் மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபனின் ஒழுங்கமைபில் மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.ஸ்ரீதரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், முப்படை மற்றும் பிரதேச செயலர்கள், துறைசார் அதிகாரிகளது பிரசன்னத்துடன் நடைபெற்றது.

இதன்போது முக்கிய விடையமாக எரிபொருள் பிரச்சினை முதன்மை விவாதப் பொருளாக இருந்த நிலையில் அதற்கான பொறிமுறைகள் சமர்பிக்கப்பட்டிருந்தன.

மேலும் உள்ளக வீதி புனரமைப்பு, குறிப்பாக அடிக்கல் நாட்டப்பட்டும் அவை முடிவுறாது இருப்பது,
பெடுந்தீவு படகு போக்குவரத்துக்கான நிரந்தர தீர்வு, நீர் வழங்ல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து விரிவாகா ஆராயப்பட்டன.
0000

இதன்போது மாவட்டத்தின் பல்வேறு விடையங்கள் ஆராயபட்ட நிலையில் குறித்த உள்ளக விளையாட்டு மைதானம் அமைப்பதற்காள நிதி கிடைத்தும் அதன் அமைவிடம் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
என அதிகாரிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

இன்னிலையில் உடுவில் பிரதேச சபை மற்றும் கோப்பாய் பிரதேச சபைகள் அதற்கான இடத்தை தாம் வழங்குவதாக எழுத்துமூலமாக வழங்கியுள்கதாக கூறியிருந்தனர்.

இன்னிலையில் குறித்த உள்ளக மைதானத்தை யாழ் நகரில் தான் அமைக்க வேண்டும் என்றோ ஏற்கனவே இனங்காணப்பட்ட இடத்தில் தான் அமைக்க வேண்டும் என்றோ அடம்பிடித்துக் கொண்டிராது வேறு தெரிவுகளை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வகியுறுத்தினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106