சுயநலவாதுகளின் சதிக்கு இடம் கொடுக்காது நீதியை தரவேண்டும் – பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் போராட்டம்!
Tuesday, March 24th, 2026
……..
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இடமாற்ற சபையால் இடமாற்றப் பட்டியலிடப்பட்டுள்ளவாறு ஆசிரியர்களது இடமாற்றத்தை துரிதமாக வழங்கக் கோரி கடந்த 8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டங்களில் சேவையை பூர்த்தி செய்த ஆசிரியர்கள் போராட்டம் ஒன்றை இன்று (24) முன்னெடுத்திருந்தனர்.
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில். –
“8 வருடத்திற்கும் மேலாக வெளி மாவட்டத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்களை வஞ்சிப்பதேன்?”
“வெளிமாவட்ட ஆசிரியர்கள் இடமாற்ற உரிமை இழந்தவர்களா?”
“வதைக்காதே வதைக்காதே நல்நாற்றுக்களை நாலிரண்டு ஆண்டுகளாய் நாட்டியோரை waiting pending எண்டு காலம் தாழ்த்தி”
“நியமன கடிதத்தின் நியமன காலம் முடிந்த எமக்கு மேலதிக தண்டனை எதற்கு?”
“யாரும் போக மாட்டோமென வேறு திசை பார்க்க நாமிருக்கோம் என வந்த எமை நீடு காலம் நீட்டி வாட்டி வதைப்பது தான் நீதியா?”
உள்ளிட்ட பல்வேறு கோசங்களுடன் பதாதைகளை தாங்கி போராடத்தை முன்னெடுத்திருந்தனர்.
வருடா வருடம் இடமாற்ற சபையால் ஆசிரியர்களது இடமாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக 01.01.2026 ஆம் திகதியன்று வழங்கவென பட்டியலிடப்பட்ட இடமாற்றங்கள் இதுவரை ஒருசிலரது சுயனலங்களுக்காக தடுக்கப்பட்டு வருகின்றது.
இது எமது உரிமைகளை திட்டமிட்டு பறிப்பதாக இருக்கின்றது.
நாம் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கிணங்க எமது சேவைகளை சரியாக செய்து முடித்துள்ளோம்.
ஆனாலும் வழங்கப்பட்ட இடமாற்றம் இன்னும் எமக்கு கிடைக்காத நிலை இருக்கின்றது.
எமக்கு நீதி வேண்டும். அரசியலும் அதிகாரமும் எமது நியாயத்தை பறிக்கின்றது.
எனவே துறைசார் அதிகாரிகள் சுயநலவாதுகளின் சதிக்கு இடம் கொடுக்காது எமது உணர்வுகளை மதித்து நீதியை தரவேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தனர்.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106