வவுனியா குறித்து டக்ளஸ் தேவானந்தா முக்கிய கலந்துரையாடல்!
Sunday, March 22nd, 2026
…………
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.
கடந்துசென்ற தேர்தல்களின் பின்னரானதும், சமகாலச் சூழலின் பிரதிபலிப்புக்களுக்கும் ஈடுகொடுத்து முன்னகரும் வகையில் கட்சியுன் அரசியல் முன்னகர்வுகளை வினைத்திறனாக கொண்டுசெல்லும் நோக்குடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக வவுனியா மாவட்ட மக்களை ஒன்றிணைத்து கட்சியை நிகழ்கால சூழலுக்கு ஏற்ப வலுவாக்கும் பொறிமுறை குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், மாவட்டத்தின் நிர்வாக பொறுப்பாளர் ஜெயராஜ் (கிருபன்), மற்றும் பிரதேசங்களின் நிர்வாக பொறுப்பாளர்கள் முக்கியஸ்தர்களது பிரசன்னத்துடன் வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது பிரதேசங்களை ஒன்றிணைத்த வட்டார கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தி எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கான ஆலோசனையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
090
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106