கியூ.ஆர்ரை தவறாக பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை!
Monday, March 16th, 2026
……
நாடு முழுவதும் கியூ.ஆர் குறியீடு முறையிலான எரிபொருள் விநியோக முறையை பொதுமக்கள் பயன்படுத்தும் போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எவ். யூ வூட்லர் இதனைத்தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கியூ.ஆர் குறியீடு முறையைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள், அதில் மோசடி செய்பவர்கள் அல்லது அதன் நடைமுறைப்படுத்தலுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள்.
எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் போது பொதுமக்கள் பொறுமையுடனும், பொலிஸாருக்கு ஒத்துழைப்புடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நடமாடும் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஒழுங்கைப் பராமரிக்கவும் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கவும் மேலதிக உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106