வடக்கின் போரில் வாகைசூடிய மத்தி!

Sunday, March 8th, 2026


….
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கிடையிலான 119ஆவது ‘வடக்கின் சமர்’ மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் நிறைவுக்கு வந்தது.

இப்போட்டியில் சகலதுறைகளிலும் அதிரடி காட்டிய முரளி திசோனின் அபார ஆட்டத்தால், யாழ். மத்திய கல்லூரி 3 விக்கெட்களால் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தடுமாறிக் கொண்டிருந்த யாழ். மத்திய கல்லூரி,

248 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி  சனிக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த மத்திய கல்லூரிக்கு, முரளி திசோன் மற்றும் ஜேசுதாசன் நிதர்சன் ஜோடி அசாத்தியமான போராட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்தப் போட்டியின் நாயகனாகத் திகழ்ந்த முரளி திசோன், பந்துவீச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 12 விக்கெட்களைக் சாய்த்து சென் ஜோன்ஸ் அணியின் ஓட்ட வேகத்தைக் கட்டுப்படுத்தினார்.

துடுப்பாட்டத்திலும் நங்கூரம் பாய்ந்தது போல் நின்ற அவர், ஆட்டமிழக்காமல் 81 ஓட்டங்களைக் குவித்து அணியை வெற்றிக் கோட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அவருக்குத் துணையாக அதிரடி காட்டிய ஜேசுதாசன் நிதர்சன் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கலாக 44 ஓட்டங்களை விளாசினார்.

சென் ஜோன்ஸ் அணி சார்பில் உதயனன் அபிஜோய்ஷாந்த் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 121 ஓட்டங்களைக் குவித்த போதிலும், ஏனைய வீரர்களின் ஒத்துழைப்பு இன்மையால் அந்தப் போராட்டம் வீணானது.

இந்த வெற்றியின் மூலம் வடக்கின் சமர் வரலாற்றில் யாழ். மத்திய கல்லூரி தனது 30ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இருப்பினும், தொடர் வெற்றிகளின் அடிப்படையில் சென் ஜோன்ஸ் கல்லூரி 40 வெற்றிகளுடன் இன்னமும் முன்னிலையில் உள்ளது.

சென் ஜோன்ஸ் கல்லூரி (1st Inn): 119/10 (முரளி திசோன் 5 விக்.)

யாழ். மத்திய கல்லூரி (1st Inn): 95/10 (கணேசமூர்த்தி கௌசிகன் 5 விக்.)

சென் ஜோன்ஸ் கல்லூரி (2nd Inn): 223/10 (அபிஜோய்ஷாந்த் 121, முரளி திசோன் 7 விக்.)

யாழ். மத்திய கல்லூரி (2nd Inn): 250/7 (முரளி திசோன் 81*, நிதர்சன் 44*)

ஆட்டநாயகன் & சிறந்த சகலதுறை வீரர்: முரளி திசோன் (யாழ். மத்திய கல்லூரி)

சிறந்த துடுப்பாட்ட வீரர்: உதயனன் அபிஜோய்ஷாந்த் (சென் ஜோன்ஸ்)

சிறந்த களத்தடுப்பாளர்: கிருபாகரன் சஞ்சுதன் (சென ஜோன்ஸ்



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106