கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால்  போராட்டம் வெடிக்கும் –  ஆலம் எச்சரிக்கை!

Wednesday, February 18th, 2026


……
இந்திய மீன்பிடியாளர்கள் எமது கடற்பரப்பை பயன்படுத்த எந்தச் சூழ் நிலையிலும் அனுமதியளிக்க முடியாது என கூறியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம், இவ்விடையன் குறித்து கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால் அவருக்கெதிரான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மன்னார் மற்றும் தீவகம் ஆகியவற்றின் கடற்றொழில் சமாசங்களின் பிரதினிதிகள் பங்கேற்புடன்
யாழ்ணத்திலுள்ள தந்தை செல்வா அரங்கில்
ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் இவ்வாறு தெரிவுத்ததுடன் மேலும் கூறுகையில் –

நாட்டில் பெரும் பேசுபொருளாக இருக்கின்ற கரைவலை தொழில்  நடைமுறைகள் தொடர்பில் குறிப்பாக தமிழகம் காரைக்காலில் இருந்து வருகின்ற எல்லைதாண்டும் மீன்பிடியாளர்கள் தொடர்பில் நாம் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றோம்.

அதன் பிரகாரம் அனைத்து மாவட்டங்களும் இணைந்து கலந்துரையாடியதன் அடிப்படையில் ஒரு முடிவுக்கு நாம் வந்துள்ளோம்.

இதேநேரம் ஜனாதிபதி செயலகம் முன் கரைவலை தொழிலை அனுமதிக்குமாறு கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை சிலர் செய்திருந்தனர்.

இதன்போது குறித்த தரப்பினரை சந்தித்த ஜனாதிபதி நாட்டிலுள்ள  சட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தார்.

இதன்போது சட்டத்தை மீறி அனுமதிக்கப்படாத ஒரு தொழிலை செய்ய அனுமதிபதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் அவர்களுக்கு விளக்கியிருந்தார்.

அதையே தான் நாங்களும் கூறுகின்றோம் எந்த தொழில் முறைகள், அரசால் தடுக்கப்பட்டிருக்கின்றதோ அந்த தொழில் முறைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று.

ஏனையவர்களுக்கு பாதகமாக இருக்கும் என்பதை அறிந்துதான் மீனவர்களின் கோரிக்கைக்கு இணங்க அரசு அதைச்  சட்டமாக்கி இருக்கின்றது.

ஒரு சிலரின் தேவைக்காகவும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்பதற்காகவும் எந்த தடைசெய்யப்பட்ட தொழில் முறையும் ஏற்றுக்கொள் நாங்கள் இணங்கவில்லை.

அதேவேளை சட்டரீதிதாக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தொழிலில் ஏற்படுகின்ற தொழிலின் பாதிப்பு அல்லது அதனால் ஏற்படுகின்ற தடங்கல்களுக்கு எந்த வேளையிலும் அவர்களுக்காக குரல் கொடுக்க நாம் தயங்கவும் மாட்டோம்.

அடுத்தவருக்கோ அல்லது கடல் வளங்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்துகின்ற தொழில்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

கரைவலை தொழில் எவ்வாறு அரசினால் நிறுத்தப்பட்டதோ அதே போன்று ஏனைய பாதிப்பை ஏற்படுத்தும் தொழில்களும் நிறுத்தப்பட வேண்டும்.

இதனிடையே காரைக்கால் மீனவர்களின் இரு படகுகள் அண்மையில் 25 பேருடன் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இந்த இந்திய சட்டவிரோத மீன்பிடியாளர்களின் தொடர் வருகை யாழ்ப்பாணத்திலிருந்து தற்போது மன்னாரின் தென்கடல் குறிப்பாக புத்தளம் வரை அதிகரித்துள்ளது. இது எமது நாட்டு மீனவர்களை கோபத்துக்குள்ளாக்கி வருகின்றது.

ஆனால் இவ்விடையத்தில் அரசு மெத்தன போக்குடன் இருக்கின்றது.

இதே நேரம் கடற்றொழில் அமைச்சர் கடற்றொழில் விடையங்களை தவிர ஏனைய விடையங்கள் அனைத்தையும் வீரியமுடன் பேருகின்றார்.

ஆனால் எமக்கு எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன.

குறிப்பாக டித்வா புயலுக்கு பின்னர் எத்தனையோ பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்த அமைச்சர் எதுவும் கதைப்பதில்லை.

கடற்றொழில் அமைச்சர் அசமந்தமாக இருந்தால் அவருக்கெதிரான போராட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும்.

ஜனாதிபதி இந்தியா சென்றிருக்கின்றார். அவர் வேறு ஒரு விடைதமாக சென்றிருந்தாலும் ஏதோ ஒரு வகையில் எல்லைதாண்டும் இந்திய மீன்பிடியாகர்கள் வருகைதை நியாயப்படுத்தும் வகையில் கலந்துரையாட வாய்புள்ளது.

எனவே சட்டவிரோதமாக அரசினால் தடுக்கப்படுகின்ற எந்த தொழில் முறையாக இருந்தாலும் அது நிறுத்தப்பட வேண்டும் என்பதுதான் எமது கோரிக்கையாக  இருக்கின்றது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106