2026 இல் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க தீர்மானம்-கல்வி அமைச்சு!
Friday, January 2nd, 2026
…….
பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் –
2026 ஆம் ஆண்டில் 5 – 13 வரையான தரங்களுக்கான பாடசாலை நேரம் மு.ப 7.30 முதல் பி.ப 1.30 வரை மாற்றமின்றி தொடரும்.
அரச, அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்கள் 2026 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
தரம் 6 முதல் தரம் 13 வரை ஒரு நாளுக்கான பாடவேளைகளின் எண்ணிக்கை 7 ஆகும். ஒரு பாடவேளைக்காக 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 2026 ஆம் ஆண்டில் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடு தரம் 1 மற்றும் தரம் 6 இற்கு நடைமுறைப்படுத்தப்படும்.
கல்வி மறுசீரமைப்புச் செயற்பாட்டின் கீழ், தரம் 6 இற்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக 2026 ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
தரம் 1 இற்கான மாணவர்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடு 2026 ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாவதுடன்,
உத்தியோகபூர்வமாக கல்வி நடவடிக்கைகள் 2026 ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பமாகும்.
தரம் 1 இற்குரிய செயற்பாட்டு புத்தகங்கள் மற்றும் தரம் 6 இற்குரிய கற்றல் தொகுதிகள் (Learning Modules), அந்தத் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏனைய தரங்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் இதுவரையில் விநியோகித்து முடிக்கப்பட்டுள்ளன.
2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி 2026 ஜனவரி 12 முதல் 20 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பான விரிவான சுற்றுநிருபம் 2026 ஜனவரி 2 ஆம் திகதி வெளியிடப்படும்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106