வெளிநாட்டுத் தூதரகக் கிளைக்கு கிடைத்துள்ள 52,866 விண்ணப்பங்கள்!….
Wednesday, November 19th, 2025
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதற்கும், அவர்களின் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கும் இதுவரை 52,866 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதரகக் கிளைக்கு இந்த ஆண்டில் இந்தளவு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில், வெளிநாட்டுத் தூதரகக் கிளையால் இதுபோன்ற 61,229 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், 59,285 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்ப ஆவணங்களின் துல்லியத்தை சரிபார்க்க வேண்டியிருப்பதால், அனுமதிகளை வழங்க சிறிது காலதாமதம் ஏற்படும் என அமைச்சர் கூறினார்.
இது நாடுகளுக்கு நாடு மாறுபடும். மத்திய கிழக்கில் ஒரு மாதத்திற்குள் அனுமதிகள் வழங்கப்படும் என்றார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106