வடக்கு எதிர்நோக்கும் சவால்களை நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது – வியட்நாம் தூதுவர்!
Tuesday, November 18th, 2025
……
வியட்நாமைப் போல போரை எதிர்கொண்ட வடக்கு மாகாணம் எதிர்நோக்கும் சவால்களை தாங்கள் நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது என்றும் வடக்கு மாகாணத்தில் வியட்நாமியர்கள் முதலீடு செய்வதற்கான ஊக்குவிப்புகளை வழங்குவோம் என்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் ட்ரின் தி தாம் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்த வியட்நாம் தூதுவர் தலைமையிலான குழுவினர், யாழ் மாவட்டத்தின் பல்தரப்பு உயர் அதிகாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டபின் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
முன்பதாக இச்சந்திபின் போது வடக்கு மாகாண பிரதம செயலாளர், சுற்றுலாத்துறைக்கு மாகாணம் சிறப்பு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இந்தத் துறை இன்னும் தொடக்க நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதனிடையே, வடக்கு மாகாணத்தின் புள்ளிவிவரங்கள், துறை ரீதியான சவால்கள், தேவைப்பாடுகள் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்து வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், விரிவான விளக்கமொன்றை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த தூதுவர் ட்ரின் தி தாம், வியட்நாம் ஏற்றுமதி நோக்கிலான விவசாயத்தில் வலுவாக செயல்படுகிறது. அந்த அனுபவங்களை வடக்குடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். ஏனைய தொழில்நுட்ப அனுபவங்களையும் பகிர முடியும்.
வடக்கு மாகாண அதிகாரிகளை வியட்நாமுக்கு அழைத்து எங்கள் அனுபவங்களைப் பகிரலாம். நீங்கள் முன்வைத்த முதலீட்டு வாய்ப்புகளை வியட்நாமிய முதலீட்டாளர்களுக்கு தெரிவிப்பேன்.
அவர்களை வடக்கில் முதலீடு செய்ய ஊக்குவிப்பேன். அதிக எண்ணிக்கையிலான வியட்நாமியர்கள் தற்போது இலங்கைக்கு பயணம் செய்கின்றனர்.
வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மையங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தி இங்கு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன், என்றார்.
அத்தோடு, முதலீட்டாளர்கள் நேரத்தை மிச்சப்படுத்த விரும்புவார்கள். எனவே கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்ளூர் விமான சேவை மேலும் வினைத்திறன் பெறுவது அவசியம். வியட்நாமின் மாநிலங்களுடன் வடக்கு மாகாணமும் நேரடி ஒத்துழைப்புக் கட்டமைப்புகளை உருவாக்க விரும்புகிறோம், எனவும் குறிப்பிட்டார்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கல்வி, விவசாய, உள்ளூராட்சி, சுகாதார அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
999
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106