கோழிக் கடைகளை விவகாரம் – வியாபாரிகளின் பொருளாதார ஈட்டல் பாதிக்காத வகையில் பொறிமுறை அவசியம் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!
Tuesday, November 11th, 2025
………
யாழ் மாநகரின் ஆளுகைக்குள் சட்ட பூர்வமற்ற வகையில் இயங்கும் சிறு கோழிக் கடைகளை அகற்றுவதை தவிர்த்து அக்கடைகளை முன்னெடுக்கும் வியாபாரிகளின் பொருளாதார ஈட்டல் பாதிக்கப்படாத வகையில் பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என யாழ் மாநாகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா வலியுறுத்தியுள்ளார்.
யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற நிலையில் பல்வேறு பிரச்சினைகள் சபையில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இதன்போது அனுமதியின்றிய கோழிக் கடைகள் தொடர்பில் குறிப்பாக அக்கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதில் இருக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக பதிவு செய்யப்படாத கடைகளாக அவை இருப்பதனால் அவற்றிலிருந்து அகற்றப்படும் கழிவுகளை மாநகரசபை
அகற்றுவது தவிர்க்கப்படுவதாகவும் இதனால் அவை வீதிகளில் வீசப்படும் நிலை உருவாகுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அத்துடன் குறித்த கடைகளை அகற்றுவது தொடரிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்னிலையில் குறித்த கடைகளை அகற்றாது அக்கடைகளை முன்னெடுக்கும் வறிய சிறிய முயற்சியாளர்களின் பொருளாதார நலன் கருதி செயற்படுவதற்கு உரிய பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்பப்படுவது அவசியம் என்றும் இதற்கு சபை நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106