ஜனநாயக தினத்தை முன்னிட்டு நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டம் – யாழ் வந்த தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!
Monday, September 15th, 2025
…..
யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுடன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்றையதினம் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
சர்வதேச ஜனநாயக தினம் செப்ரெம்பர் 15 ஆம் திகதியான இன்று உலகின் ஜனநாயகம் மிக்க நாடுகளில் அனுஸ்டிக்கப்படும் நிலையில் குறித்த நிகழ்வின் விழிப்புணர்வு நிகழ்வுகள் யாழ் மாவட்டத்தின் நெடுந்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படுகின்றது.
200 இற்கும் அதிக நாடுகள் இருக்கும் சூழலில் 196 நாடுகழ்லில் இந்த சனநாயக தினம் கொண்டாடப் படுகின்றது.
ஜனநாயகம் என்பது தேர்தல்களை நடத்துதல் மட்டுமல்ல அந்த நிலையை மக்களிடையே கொண்டு சென்று இலக்கை அடைவதுமாகும்.
குறிப்பாக இளம் பிரைஜைகளுக்கு விளிப்புணர்வு கொடுப்பது நவீனத்துவங்களை உள்வாங்குதல் என்பனவும் இதில் மாற்றத்தை உருவாக்கும் முக்கிய பொறிமுறைகளாக இருக்கின்றன.
இதனடிப்படையில் நெடுந்தீவில் இரு நாள் வேலை திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குறிப்பாக இன்று 15 மற்றும் நாளை 16 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படும் இந்த விழிபுணர்வு நிகழ்வுகளின் முதன்மையானதாக தேர்தல் திணைக்களத்துடனான தகவல் தொழில் நுட்பத்தின் வகிபாகத்தை நெடுந்தீவு மக்களுக்கி கொண்டுசெல்வதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
0000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106