கிராமத்து வீரர்களுக்கு அங்கீகாரம் -அரியாலையில் ஆரம்பமாகிறதுமென்பந்துத் தொடர்!

Sunday, August 31st, 2025


……..
அரியாலை “கில்லிகள்” மென்பந்து கிரிக்கெற் சுற்றுப்போட்டி எதிர்வரும் செப்ரெம்பர் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக குறித்த சுற்றுப்போடியின் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த ஏற்பாட்டுக்குழு மேலும் கூறுகையில் –

கிராமத்து வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரவும் அதற்கான அங்கீகாரத்தை கொடுக்கும் வகையிலும் வருடா வருடம் நடத்தப்படும் நோக்குடன் கடந்த வருடம் குறித்த சுற்றுப்போட்டி ஆரம்பிக்கப்பட்டது.

9 வீரர்கள் களமிறங்கும் 6 பந்துப் பரிமாற்றங்களை கொண்ட போடியான குறித்த தொடரில் ஏலத்தின் மூலம் வீரர்கள் உள்வாங்கப்பட்டு நடத்தபடும் போட்டியில் இம்முறை
அரியாலை,கொழும்புத்துறை, ஈச்சமோட்டை,மணியம்தோட்டம், பாசையூர் சுண்டுக்குளி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 10 அணிகள் பங்குபற்றுகின்றன.

குறித்த போட்டியானது எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் அரியாலையில் இடம்பெறவுள்ளது.

கிரிக்கெற் விதிமுறைகளுக்கு அமைய நடத்த்ப்படவுள்ள குறித்த போட்டியில் முதல் மூன்றிடங்களை பெறும் அணிகளுக்கு முறையே 150 ஆயிரம், 80 ஆயிரம், 30 ஆயிரம் பணப் பரிசில்களுடன்
வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பஅவுள்ளதாகவும் குறித்த குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
0000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106