30 ஆம் நாளன்று சர்வதேச காணாமல் போனோர் தினம் அனுஸ்டிப்பு – செம்மணியில் போராட்டத்துக்கு ஏற்பாடு!

Wednesday, August 27th, 2025


……..
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள கவன ஈர்ப்பு போராட்டம் வலுப்பெற தமது ஆதரவு இருக்குமென தெரிவித்த
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைபாளர் இன்பம் குறித்த போராட்டம் வெற்றிபெற அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று
(27.08.2025) இது தொடர்பில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த அவர் மேலும் கூறுகையில் –

குறித்த போராட்டம் கிட்டு பூங்காவிலிருந்து ஊர்வலமாக ஆரம்பித்து  செம்மணியில் பிரதான கூட்டத்துடன் நிறைவு பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதே எமது எதிர்பார்பு.

இதேநேரம் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் ஒற்றுமையீனங்கள் மற்றும் குளறுபடிகளால் தான் எந்தவொரு போராட்டமும் முழுமையான இலக்கை அடையாது இருக்கின்றது.

அதன்படி குறித்த போராட்டம் வலிந்து கோணாமல் ஆக்கப்பட்டோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றது.

குறித்த தரப்பினருடன் பேசி ஒற்றுமையின் பலத்தை ஒரு நிலையில் கொண்டுசேர்க்க இணக்கப்பாடு எட்டப்பட்டதன் பின்னரே எமது அமைப்பு ஆதரவை வழங்குகின்றது.

அந்த வகையில் நியாயமான போராட்டத்தை பொது அமைப்புகளும் மக்களும் இணைந்து  வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106