இலங்கை வெளிவிவகார அமைச்சு இடமாற்றம் !
Monday, September 19th, 2016
வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தை வேறு இடமொன்றில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சை ஜாவத்தையில் அமைக்க மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஜாவத்தையில் அமைந்துள்ள 02 ஏக்கர் அளவிலான இடப்பகுதி ஒன்றினை வெளிவிவகார அமைச்சுக்கு ஒதுக்கிக் கொள்வதற்கு வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் மேற்படி அமைச்சரவை பத்திரம் முன்வைக்கப்பட்டது.
தற்போது கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள கட்டடமானது பிரித்தானியர் ஆட்சியின் போது நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை - அமைச்சர் மகிந்த அமரவீர!
திருக்கார்த்திகை விரதத்தை முன்னிட்டு விளக்குகளை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்!
அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக ஸ்திரப்படுத்துவோம் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
|
|
|


