இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு எதிர்ப்பு – ஒப்பந்தத்தை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்!

Thursday, July 31st, 2025

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் அமானி ரிஷாத் ஹமீத் தாக்கல் செய்த மேற்படி மனுவின் பிரதிவாதிகளாக, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தின் மூலம் இலங்கை மக்களின் கைவிரல் அடையாளம் உள்ளிட்ட தரவுகள் இந்தியாவுக்கு வழங்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இது நாட்டின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான அமைச்சரவை முடிவுகள், பொதுமக்கள் மற்றும் பாராளுமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படா மல் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106