யாழ் மாவட்டத்தின் 6 பிரதேச செயலகங்களில் நிரந்தர நிர்வாக உத்தியோகத்தர் இல்லை – ஒரே பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக கடமைபுரியும் ஒருவர்!

Wednesday, July 30th, 2025

யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (AO) காணப்படுகின்ற நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்த உத்தியோகத்தர் இன்றி பதில் கடமை உத்தியோகத்தர்களே கடமையில் உள்ளமை  தகவல் அறியும் சட்ட மூலத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களான யாழ்ப்பாணம், நல்லூர், சங்கானை, உடுவில், சாவகச்சேரி, கரவெட்டி,பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களில் கடமைகள் உள்ள நிர்வாக உத்தியோத்தர் அநேகமாக 2021 ஆம் ஆண்டு பொறுப்பேற்றவர்களாக காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் கோப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றம் நிர்வாக உத்தியோத்தர் மட்டும் 2011 இருந்து இன்று வரை  இடமாற்றம் ஏதும் இன்றி கோப்பாய் பிரதேச செயலகத்தில் 14 வருடங்களாக தொடர்ந்து கடமையில் உள்ளார்.

ஏனைய பிரதேச செயலகங்களான வேலனை ,நெடுந்தீவு ஊர்காவற்துறை, காரைநகர் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகங்களில் நிர்வாக உத்தியோத்தர் நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106