அமரர் மாணிக்கத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் இறுதி மரியாதை!

Monday, July 28th, 2025


சுழிபுரம் பெரியபுலவைச் சேர்ந்த அமர்ர மாணிக்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட தோழர் சேகர் (ஸ்ரீதரன்) அவர்களின் மாமனாரான அமரர் மாணிக்கம் நேற்றையதினம் (27) வயது மூப்பின் காரணமாக காலமானார்.

இன்நிலையில் சுழிபுரம் பெரியபுலவில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு  சென்றிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அமரரின் பூதவுடலுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரும் வடக்கு மாகாணசபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன், கட்சியின் யாழ் மாவட்ட தலைமை அலுவலக நிர்வாக பொறுப்பாளர்  வசந்தன் ஆகியோருடன் கட்சியின் வலிகாமம் மேற்கு பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் உள்ளிட்ட பலரும் அன்னருக்கு தமது அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106