மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு – பெற்றோலின் விலை மறுபடியும் 300 ஐ கடந்தது!
Tuesday, July 1st, 2025
கடந்த நள்ளிரவுமுதல் (30) அமுலாகும் வகையில், மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதனடிப்படையில் லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாயாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாயாகும்.
மேலும், ஒக்டென் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாயாகும்.
000
Related posts:
வடக்கில் 14 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான மீண்டும் கட்டுப்பாட்டு விலை - நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்ச...
யாழ்ப்பாணத்தில் கடந்த ஆண்டு 175 க்கும் மேற்பட்டோர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு - வைத்தியர் அதி...
|
|
|


