அவுஸ்திரேலிய பெண்கள் அணி வெற்றி!
Monday, September 19th, 2016
இலங்கை -அவுஸ்திரேலியப் பெண்கள் அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில், அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.
ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி, மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி, 24.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 76 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஒரு கட்டத்தில் 8 விக்கெட்டுகளை இழந்து 38 ஓட்டங்களுடன் தடுமாறிய அவ்வணி, இனோக்கா ரணவீரவின் ஆட்டமிழக்காத 32 (43) ஓட்டங்களின் துணையோடே, 50 ஓட்டங்களைக் கடந்தது. தவிர, இஷானி கௌஷல்யா பெற்ற 14 ஓட்டங்களே, அடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக அமைந்தன. பந்துவீச்சில் ஹோலி பேர்லிங், கிறிஸ்டன் பீம்ஸ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் மேகன் ஸ்கட், எரின் ஒஸ்போர்ண் இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
77 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 15.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றியடைந்தது. துடுப்பாட்டத்தில் அணித்தலைவி மெக் லனிங், 27 (21), நிக்கோல் பொல்ட்டன் 19 (34) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் இனோக்கா ரணவீர, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இத்தொடரின் அடுத்த போட்டி, செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106