இஸ்ரேலின் ‘அயன் டோம்’ கட்டமைப்பில் தோல்வி – இஸ்ரேல் இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஈரானின் ஏவுகணைகள்!

Saturday, June 21st, 2025

இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் கடந்த ஒரு வாரமாகவே தொடர்ந்து வருகிறது. இத்தனை காலம் அயன் டோமை யாராலும் மிஞ்சவே முடியாது எனச் சொல்லப்பட்டு வந்த நிலையில், அதைத் தாண்டி ஈரான் ஏவுகணைகள் இஸ்ரேலைத் தாக்கி வருகிறது.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயன் டோமை எந்தவொரு ஏவுகணையாலும் முறியடிக்கவே முடியாது என்றே இத்தனை காலம் சொல்லப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த ஒரு வாரமாக ‘அயன் டோம்’ (Iron Dome) இதுவரை இல்லாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளது. மோதல் எட்டாவது நாளாக நீடிப்பதால், அதன் செயல்திறன் மற்றும் அது நீண்ட மோதலைத் தாக்குப்பிடிக்குமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ன.

நேற்று ஜூன் 19ம் தேதி தெற்கு இஸ்ரேலில் உள்ள சோரோகா மருத்துவமனை உட்பட நான்கு இடங்களில் இந்தத் தாக்குதல் மேற்கொண்டது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பைத் தாண்டி ஈரானின் ஏவுகணைகள் அந்த மருத்துவமனையைத் தாக்கியுள்ளது.

மேலும், சில ஏவுகணைகள் இஸ்ரேல் வான் பாதுகாப்பை மீறிச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மன்றத்தின் தலைவரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் ஜெனரல் அமீர் அவிவி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் , “அயன் டோம் அழுத்தத்தில் இருக்கிறது. அது உண்மை தான்.

ஆனால், அதன் செயல்திறனில் பெரிய பாதிப்பு இல்லை. இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பில் அயன் டோம் மட்டும் இல்லை.

குறிப்பாக நீண்ட தூரத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகள் ‘Arrow 3’ என்ற அமைப்பு மூலம் இடைமறிக்கப்படுகின்றன. சாட்டிலைட் மூலம் இயங்கும் இது 90%க்கு மேல் துல்லியமானதாக இருக்கிறது.

நாம் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்தவொரு அமைப்பும் முழு பாதுகாப்பானதாக இருக்காது. 100% பாதுகாப்பை எட்டுவது கிட்டதட்ட முடியாத காரியம்.ஒரு ஏவுகணை வந்தாலும் உடனடியாக இஸ்ரேலின் பல அடுக்கு பாதுகாப்பு இயங்கும்இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பதுங்கு குழிகளுக்குச் செல்ல வேண்டும்” என்றார்.

ஒருவேளை ஈரானின் தாக்குதல்களினால் அயன் டோம் பாதிப்படைந்தால் இஸ்ரேலின் நிலை யுகிக்க முடியாததாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106