இஸ்ரேல் – ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல – முன்னாள் ஜனாதிபதி ரணில் !
Thursday, June 19th, 2025
தற்பாதுகாப்புக்காக, இஸ்ரேல் – ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே, ஈரான் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கவையல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த தாக்குதல்களை, ஜி 7 நாடுகளின் குழு நியாயப்படுத்துவதும் ஏற்கத்தக்கதல்ல என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் சென். பீட்டர்ஸ்பேர்க்கில் (Saint Petersburg) நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், அதிக பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில், ஜீ7 அமைப்பை இரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக ஜி20 நாடுகளின் குழுவை அங்கீகரிக்க வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில் ரஷ்யாவை முன்னிலையாகக் கொண்ட பிரிக்ஸின் வகிபாகமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106