யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழில் இரத்ததான முகாம்!

Saturday, June 14th, 2025

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகம் மற்றும் யாழ். போதனா வைத்தியசாலை ஆகியன இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை முன்னெடுத்தன.

இந்த முகாம் நேற்று வெள்ளிக்கிழமை, காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது.

இதில் பங்கேற்கும் ஒவ்வொரு இரத்ததானக் கொடையாளருக்கும் இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. மேலும் இந்த முகாம், சமூகத்தில் இரத்ததானத்தின் முக்கியத்துவத்தையும், சூழலியலின் பாதுகாப்பையும் ஒருசேர வலியுறுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.

இதில் யாழ். இந்திய துணைத் தூதர் சாய் முரளி, யாழ். இந்திய துணை தூதரக அதிகாரிகள், பொலிஸார், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106