பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்க யாழ்ப்பாணத்தில் நடைபவனி!
Tuesday, June 3rd, 2025
இலங்கைத்தீவில் பொலித்தீன் பாவனையை முற்றாக இல்லாதொழிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபவனி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறபுள்ளதாக
SAFE LIFE அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட இணைபாளர் சுதர்சிகா தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் –
பொலித்தீன் பாவனையால் இன்று மானுடர்கள் மட்டமல்லாது விலங்குகள் கடல் வாழ் உயிரினங்கள் என அத்தனை உயிரினங்களின் வாழ்வியலும் கேள்விக்குறியாகியுள்ளது.
குறிப்பாக ஒரு நாள் பாவனை பொலித்தீன் பைகள், பிளாஸ்ரிக் குவளைகள், பிளாஸ்ரிக் போத்தல்கள் உள்ளிட்டவற்றை மக்கள் பாவனையில் இருந்து இல்லாதொழிப்பது அவசியமாகும்.
ஆனாலும் ஆபத்து என்று தெரிந்தும் பாவனையாளர்கள் அந்த பாவனையில் இருந்து விடுபடுவதாக தெரியவில்லை.
சில பொலித்தீன்கள் ஒன்று மண்ணுள் புதையும் போது அது உக்கலடைய 1000 ஆண்டுகள் செல்கின்றன. இதனால் பல்வேறு தாக்கங்களை உயிரினங்கள் எதிர்கொள்ள நேரிடுகின்றது.
அந்தவகையில் பொலித்தீன்களால் ஏற்படும் தாக்கத்தை கட்டுப்படுத்துவது சமூகத்தில் வாழும் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும்.
அதனடிப்படையில் நாம் முன்னெடுக்கும் நிகழ்ச்சித்திட்டமானது எதிர்வரும் 5 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு யாழ் பொது நூலக பின் நுழைவாயில் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு நூலகத்தின் பிரதான நுழைவாயில் வரை நடைபவனி நடைபெறவுள்ளது.
இதில் மாணவர்கள் பொதுனல விரும்பிகள் என பலரும் கலந்து நிகழ்வை வலுப்படுத்தி விழிப்புணர்வின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
………..
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106